Search This Blog

Wednesday 12 March 2014

உன் நிழலில்...!


வெந்தணலில் வெந்தாலும்
அந்தமில்லாதவனடி நான்...!
உந்தன் குளிர்மை பார்வையில்  
வெம்மை காய்ந்திடுவேன்....!

இரும்புக்கம்பிகள் என்னை முறுக்கிட்டாலும் - உன் 
கரும்பு போன்ற வார்த்தைகள் நித்தம் சிறை மீட்டிடும் எனை 
அரும்புகின்ற மொட்டாய் தினம் விடியலுக்காய் காத்திருந்து  
துரும்பாகி இளைத்து இறுதியில் சருகாகி போவேனோ??

விரும்புகி ன்றேனடி உன் நிழலில் கிடந்து மடிந்திடவே..
தொலைந்து போன நாட்களை தேடியலையும் பாவி என்னில் - உன்னை  
தொலைத்து பட்ட மரமாய் வெட்ட வெளியில் தனித்திருப்பவளே..!
துளிர் விட்டு நீ செழித்திடவே என் உயிரை நுனி விரலில் ஏந்தி 
கடக்கின்றேன் பொழுதுகளை...

ஒருவேளை.... 
இறுதி வரை உன்னைச்சேராமல் போனாலும் 
வந்து விடு என்னோடு என் தாயானவளே...!
இறுதி தருணத்திலும் உன் நிழலில் நான் 
பயணித்திடவே....

பிணைப்பான இதயங்கள் இணைந்த பொழுது 
பிரிந்து கொண்டோம் -மீண்டும் 
பிரிவேயின்றி இணைந்து கொள்ள 
பிராணன்கள் பிரிய வேண்டுமடி...!

பிறப்பின்றி இறப்பின்றி உந்தன் 
நிழலில் என்றும் யான் ஒன்றிடவே..!


  

லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "உன் நிழலில்   " என்ற தலைப்பில் இன்று (12.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/


No comments:

Post a Comment