Search This Blog

Thursday 23 April 2015

ஒரே நாளில்(20.04.2009) 476 சிறுவர்கள் உட்பட 1,496 தமிழர்கள் படுகொலையான, 3,333 உறவுகள் காயமடைந்த அந்த கறுப்பு ஏப்ரல் 2009 இன் கொடிய நாட்களின் உதிரம் தோய்ந்த நினைவுகள்....!

விம்மி வெடித்த அந்தக்கணப்பொழுதுகள்...
விழுந்து எழுந்து உயிர் துறந்த தருணங்கள்...
விடுதலை பெறுவோம் என்று நம்பி ஓடி
விண்ணைத்தொட்ட சொந்தங்கள் எத்தனையடா தமிழா...???

ஆயிரங்கள் தாண்டி அறுவடை ஆன இந்த நாட்கள்
ஆருக்கும் நினைவிருக்கோ???

எழுதி எழுதி குவிந்த எழுத்துக்கள் களைத்து போயிருக்கும்
எண்ணிலடங்கா எங்கள் உறவுகள் சிதறிப்போன நாட்களில்
சித்திரை 20,21,22, 23, 24, 25 நாட்காட்டியில் சிவப்பாய் 
இரத்தம் தோய்ந்து வடிவதாய் ஒரு பிரமை....!

பாதுகாப்பு வலயம் என்று கூவி அழைத்து
பாழ்பட்டு போன படைகள் எங்கள் உறவுகளை
மனிதக்கேடயங்களாக மனிதாபிமானமற்று
கொன்று குவித்து எங்கள் மண்ணுக்கு மிகையான
உதிரங்களை வாரி இறைத்த நாட்கள் ...!

பதுங்கி இருந்த பதுங்கு குழிகளை பார்த்து பார்த்துவீசிய
விதம் விதமான குண்டுகளால் மூச்சுத்திணறியும்
எரிகாயங்கள் பட்டும் உடல் சிதறியும் படுகொலையான
எம்மின உறவுகளின் கதறல் ஒலி இன்னும் ஒலித்துக்
கொண்டேதான் இருக்கும்....!

மூடர்களின் மூர்க்கத்தனமான அகோரத்தாக்குதல்களால்
மூச்சிழந்து போன உறவுகள் ஒரே நாளில் ஆயிரத்தை
தாண்டிப்போன கொடுமை....!
உடலங்கள் யாவும் உருக்குலைந்தும் சிதறியும்
உதிர ஆறு ஓடிய அவலத்தின் உச்சம் பெற்ற நாட்கள்...! 

கொன்று குவித்தவனுக்கு நினைப்பே இருக்காது
கொடுமை என்று கண்ணீர் விட்ட நாமும் ஆறு ஆண்டுகளில்
கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து கொண்டிருப்போம்....!
கொல்லப்பட்ட உறவுகளின் எச்சங்கள் - அங்கே
கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக்கொண்டிருக்கும்
கொடுமை யார் அறிவாரடா தமிழா...??

ஈருடலும் ஒருடலுமாய் இருந்தவன்
இரத்தமும் சதையுமாய் சிதறுண்டு  போனதை
கண்டும் நடைப்பிணமாய்வாழும் மனைவிகளின்
மனநிலை யார் அறிவீரோ???

இன்னும் அந்த அதிர்ச்சிகளில் இருந்து மீளாமல்
இருக்கின்ற நிலை தெரியாமல் சித்தம் கலங்கிய
உள்ளங்களின் ஏக்கம் அறிவீரோ???

உயிர் கொடுத்தவர்கள் யார் என்றே தெரியாமல் - அவர்கள்
உரமாகி போன மண்ணில் வீடு கட்டி விளையாடும்
பிஞ்சுகளின் எதிர்காலம் யார் கையில்....???

பிய்த்து போட்ட உடலையும் மாண்டு போன எலும்புகளையும்
அணைத்துக்கொண்டு ஒப்பாரிவைக்கும் எங்கள் தமிழ் ஈழ
மண்ணின் குரல் கேட்கின்றதா???

யார் மறந்தாலும்......
யார்மறுத்தாலும்......

முடிந்து போன யுத்த வடுக்களை தாங்கி நிற்கும்
அன்னை மண்ணில் அழியாத வடுக்களாய் இந்த நாட்கள்
அங்கே ஒவ்வொரு வீட்டிலும் விம்மலாய் கண்ணீராய்
நினைவாக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கும்....!!!

அரசி நிலவன்

=========================================