Search This Blog

Monday 9 September 2013

மெட்டி...!!! (இறுதிக்கணம் வரை... இசைத்துப் பயணிக்கட்டும்....!)



அம்மி ஏற்றி அன்பாய் அணிவித்தவன் காதல்
அலாரம் போன்று.... அடிக்கடி ஒலித்துக்  
கொண்டேயிருக்கின்றது....! இந்த சின்ன ஒலியின்
இதய நாதம் எனக்குள் - அவனின்
இதயத் துடிப்பாக துடித்து...,
இரும்பின் பிணைப்பாக அவனோடு
இணைத்து ஒலிக்கின்றது
இன்று வரை...!

இதயத்தை கழற்றி எனக்குள்
இடம் மாற்றி வைத்து - என்
இதயமதை கொண்டு சென்றவன்
இந்த ஒலியை மட்டும் தன்
இதயத்துடிப்பாக விட்டு சென்றான்...!

இதய நாதமாய் உன்னோடு - உன் 
இறுதிக்கணம் வரை... 
இசைத்துப் பயணிக்கட்டும்....! 
இழந்திடாதே எவ்விடர் வந்திடினும்
இறுக்கி கரம் பற்றி என்னவன்
இறுதியாய் உதிர்த்த வார்த்தைகள்.....!








இறுதிக்கிரியையில் - என்னவனின்
இதய நாதமதை துறக்க மறுத்த என்னை
இன்று வரை முச்சந்திகளிலும் தெருக்களிலும்
இகழ்ந்து பேச பின்னிற்போர் அரிதே....!





கடவுளை கல்லாய் பார்க்கும் மனிதர்களை போன்று
வெறும் கண் கொண்டு நோக்குவோருக்கு
வெள்ளி மெட்டியாய் காட்சி கொடுக்கும் - இந்த
வெள்ளி ஒவ்வொரு முறையும் ஒலிக்கும் போது
அள்ளி செல்லும் என் மனதை என்னவனை நோக்கி...

தரையைத்தொட்டுச்செல்லும் உராய்வால் என்னை
வருடிச்செல்வான் அவன் தன் நினைவுகளால் என்பதை
முச்சந்தி முக்கியஸ்தவர்கள் அறிந்திட நியாயமில்லை...!
முதுகெலும்பு அற்றோரின் கேலிக்குப் பலியாகி - என்னவனின்  
மூச்சினை நிறுத்திட போவதுமில்லை....! 
முத்தான என் மெட்டியினை துறந்திட போவதுமில்லை...!

நடை பயில்கின்றேன் அதிகமாக...
நன்றாக ஒலிக்கட்டும் என்னவனின் இதயம்...!
நகைப்புக்களின் ஒலியை அடக்கிட
நன்றாக ஒலிக்கட்டும் என் மெட்டியில் அடங்கிய
என் இதயவனின் மூச்சொலி.....!!!

எட்டி எட்டி போகின்றேன் விரைவாக
தட்டி தட்டி அழைத்து - என்னவன்
முட்டி முட்டி உதைக்கின்றான்
முச்சந்தி வாய்களை அவன்
மூச்சொலியால்......!!!

வெட்டி வெட்டி சாய்க்கின்றான்
வெட்டி பேச்சு மனிதர்களை
மெட்டி ஒலியால்...!!!



மெட்டியல்ல மெட்டியல்ல இது எனக்குள்
பூட்டி பூட்டி வைத்திருக்கும் என்னவனின் 
புனிதமான உயிர் மூச்சு..!!!

அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மெட்டி" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/






11 comments:

  1. சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    ReplyDelete
  2. அருமையான வரிகள் தோழி. வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  3. வரிகள்!
    வலிகள்!!
    வலிமைகள்!!!

    ReplyDelete
  4. வரிகள்!
    வலிகள்!!
    வலிமைகள்!!!

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அருள்வாசன்11 September 2013 at 04:15

      இந்த மெட்டிக்குள்
      இத்தனை நினைவுகள்
      சுமக்கப்படுகிறதா?

      அப்பப்பா...!!!

      ஒரு இதயம் இயங்க மறுத்தால்
      அத்தனையும் வலியே
      மறு இதயம் இயங்கும்வரை

      மிகவும் உணர்வு பூர்வமான
      வரிகள்.

      மிகவும் அருமை
      தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்.

      Delete
  7. வரிகள்!
    வலிகள்!!
    வலிமைகள்!!!
    இதே வலிகளை நானும் அனுபவித்திருக்கின்றேன் தோழி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete