Search This Blog

Thursday 12 September 2013

எண்ணம்...!!!


ஒவ்வொரு தனி மனிதனின் எண்ணங்களால்
ஒட்டு மொத்த உலகமே துண்டாடப்படுகின்றது..!
ஒரு சிறு மனிதனின் எண்ணங்கள் திசை மாறி -உலகத்தின்
ஒவ்வொரு உயிரையும் வேரறுக்க வல்லது...!


வல்லரசுகளின் வல்லாதிக்க எண்ணத்தால்
வறுமை தேசங்கள் பட்டினி என்னும் வர்ணம் கொண்டு
வண்ண மயமாக்கப்படுகின்றது....!



அணுவாயுதம்  சர்வ சாதாரணமாகி
அதைக்காரணம் காட்டி வலிந்து தொடுக்கும்
அத்து மீறிய யுத்தத்தினால்
அழிக்கப்படுகின்றது பல்லுயிர்கள்..!!
அநியாயமாக்கப்படுகின்றது தேசங்கள்...!!


இன்றும் இலங்கை பிளவு பட்டு கிடக்கின்றது
இனவாத எண்ணங்களால்.....!

அதிகாரம் ஆட்சி கொண்டோர் எண்ணியிருந்தால்
அடிமைத்தனமும் அராஜகமும் அழிக்கப்பட்டிருக்கும்..!
அந்த குட்டித்தீவில் அமைதி ஆட்சி புரிந்திருக்கும்....!
அட்டூழியம் காணாமல் போயிருக்கும்...!!!


எண்ணம் வழி தவறிப்போனதால்.....
அடிமைத்தனம் மேலோங்கியது....!
இலங்கை இரத்தம் குடிக்க ஆரம்பித்தது....!
இன்றும் குடித்துக்கொண்டே இருக்கின்றது....!

அடிமை விலங்கொடிக்க அன்று
ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்தார்கள்..!
ஆரம்பித்து வைத்தார்கள் அன்று
ஆட்சியின் உச்சத்தில் இருந்தோர்...!


பேரினவாத எண்ணங்கள் இன்றும் நாட்டினை
பேயாட்டம் ஆட்டிக்கொண்டே தான் இருக்கின்றது..!
பேய்கள் பிசாசுகளை கண்ணுற்றதில்லை யாரும்  ஆனால்
பேய்கள் பிசாசுகள் பாராளுமன்றமே நடாத்துகின்றன  இலங்கையில்..!
பேரினவாதமும் மனித உரிமை மீறல்களும் கை கோர்த்து
இல்லறம் நடாத்தும் அழகே தனிதான்...!



நிலையில்லா உலகை ஆள நினைத்த மனிதன் நிலைப்பதில்லை...!!!
நிலைத்து நின்று ஆட்சி புரிகின்றது அவன் நினைத்த எண்ணங்கள்..!!!
நீண்டு செல்கின்றது குற்றங்களும் உரிமை மீறல்களும்...!

பணம் உள்ளவன் எண்ணினால்
பரதேசியும்  பசியாற முடியும்...!!!
பலம் மிக்கவன் கேடு நினைத்தால்
பாலகனும் படுகொலையாவான்...!!!

எண்ணங்களின் அரச சபையில்
எல்லா மனிதனும் ஆளப்படுகின்றான்...!!!
எண்ணங்களுக்கு கிரீடம் சூடி சாமரை வீசும்
எடுப்பார் கைப்பிள்ளை தான் இந்த மனிதன்....!!!





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "எண்ணம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/














1 comment:

  1. வல்வை அகலினியன்12 September 2013 at 21:40

    // பணம் உள்ளவன் எண்ணினால்
    பரதேசியும்  பசியாற முடியும்...!!!
    பலம் மிக்கவன் கேடு நினைத்தால்
    பாலகனும் படுகொலையாவான்...!!!//

    அதிகாரவர்க்கத்தின்
    அடாவடித்தனத்தையும்...
    ஆணவத்தையும்...
    தோளுரிக்கின்ற நெருப்பு வரிகள்!

    இந்த வரிகளால்... உன்னை என் தங்கை என்பதில் நானும் திமிரடைவேன்!

    அண்ணன்
    -வல்வை அகலினியன்.

    ReplyDelete