Search This Blog

Wednesday 1 January 2014

புத்தாண்டே வருக...


புத்தாண்டே நீ வருக வருக...!!!
புதுப்பொலிவோடு நீ மிளிர்க மிளிர்க..!!

நம்பிக்கையின் விடியலாய்
நலமாக நீ விடிய வேண்டும்..!!!

ஒளி வீசி நீ விடியும் இவ்வேளை
ஒருமித்து வரவேற்கின்றோம்...!

புன்னகை புரிந்து வரும் பதின்நான்கே...!
புவி தனில் புதுப்புரட்சியுடன் வலம் வருகவே..!

வளம் கொடுத்து வழி சமைப்பாய்...!
வறட்சி போக்கி செழிக்க வைப்பாய்...!

உதிக்கின்ற புத்தாண்டே -நீ
விதிக்கின்ற செயல்கள் யாவும் இனிதாகட்டும்..!
மதிக்கின்ற ஆண்டாய் விளங்கிடு புத்தாண்டே..!


வாணமும் வேடிக்கையும் அள்ளிச்சொரிந்து
வானம் விழுத்தி வரவேற்கின்றோம்
வருக வருக என்று...!
வஞ்சிக்காமல் வந்து செல்...!

நட்புக்கரம் நீட்டி வரவேற்கின்றோம்...!
நன்றாய் பண்பாய் வந்து சென்றிடு...!

உறவு பாராட்டி உன்னை அழைக்கின்றோம்..!
உண்மையாய் என்றும் இருந்திடு...!

உலகம் உருண்டு நீ பிரியும் போது
உத்தம ஆண்டு என்று ஒரு சிலை வைப்போம் உறுதி..
உருண்டு விழுந்து கதறி உன்னை பிரியாதிருப்போம்...!

நித்தமும் எம்மை மலர வைப்பாய்..!
சத்தியம் பார் தன்னில் வாழவைப்பாய்..!
குற்றங்களை கூண்டில் ஏற்றி வைப்பாய்..!
அதிகாரத்தினை கீழே இறக்கி வைப்பாய்..!
பரிகாரத்தினை நீயே நடத்தி வைப்பாய்..!
பட்டினி என்ற பதத்தினை தொலைத்திடுவாய்...!
பழி வாங்கல்களை விழுங்கி ஏப்பமிடுவாய்..!


வழி எங்கும் உன் வரவிற்காய் மலர் தூவி
விழித்திருந்து வரவேற்கின்றோம்...!
வருக வருகவே..!

வண்ணம் கொண்டு வானவில்லாய்
வருக வருகவே..!

வரலாறு புதியதாய் எழுதவே - நீ
வசந்தங்களை அள்ளிக்கொண்டு
வருக வருகவே...!

ஒளி பொருந்தி நல் ஓவியமாய்
ஒப்பிலா வருடமாய் மிளிர்கவே..!!!

ஒன்று பட்டு ஒலி எழுப்பி வரவேற்கின்றோம்
ஒளி கொடுத்து ஆட்கொள்வாய் வசந்த வருடமே...!!!




அரசி நிலவன்



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "புத்தாண்டே வருக " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


2 comments:

  1. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete