கருவிழி பார்வையாலே என்னை கடத்தி வந்தவனே - என் காதல்
கருக்கொண்ட உந்தன் இதயக்குழியில்
உருக்குலைந்து நான் புதையுண்டு கிடக்கின்றேன்...!
அன்பென்னும் மணல் அள்ளி என்னை தூர்த்தவனே..!
அதிசயமாய் என்னை உன்னில் வார்த்தவனே...!
கருவிழி கொண்டு நேருக்கு நேர் எனைப் பார்த்தவனே..!
கரையில்லா காதலில் கரை சேர்த்தவனே...!
அடியோடு அன்பில் சாய்த்தவனே...!
அரை உயிரையும் முழுதாய் மாய்த்தவனே..!
எனக்காய் என்றும் வாய்த்தவனே...!
எந்தன் உயிரை நிலவாய் தேய்த்தவனே..!
காந்தக்கரு விழியில் பசை பூசியவனே..!
காதோரம் வந்து காதல் பேசியவனே...!
சிணுங்கும் குழந்தையாய் கெஞ்சிடுவான்...!
சின்ன சின்ன குழப்படிகளில் மிஞ்சிடுவான்..!
கண்டித்தால் கருவிழிகளால் வென்றிடுவான்...!
கண்டறியாத பார்வையால் மெல்ல தின்று மென்றிடுவான்..!
கருணை பார்வை வீசி கடவுளாயும் தோன்றிடுவான்...!
கல்லினையும் காதலிக்க வைக்கும் கருவிழியான்...!
கன்னி என்னை கட்டிப்போட்ட மெய்விழியான்..!

// சிணுங்கும் குழந்தையாய் கெஞ்சிடுவான்...!
ReplyDeleteசின்ன சின்ன குழப்படிகளில் மிஞ்சிடுவான்..! //
ரசித்தேன்...