கடலோராமாய் கால் நனைக்கும் அலைகளாய்
விழியோரமாய் இமை நனைக்கும் விழிநீர்...!
எந்தன் விழியோரம் வந்து விம்பமானாய் நீ..!
வாழ்வின் வழியோரம் யாவும் வலிகளின் அறிகுறி
எமக்கான கனவோரம் தன்னும் கண்ணீரின் தொடக்கமே...
கனக்கின்ற இதயம் எச்சமிடும்
கண்ணீரின் ரேகை படிந்து
கண்டிக்கிடக்கின்றது விழியோரம்...!
களைத்துப்போன விழிகள் ஓய்வெடுக்க
கண்டறியாத கண்ணீர் விட்டபாடில்லை...!
பனிக்கின்ற விழிநீரின் அளவுக்கு குறைவில்லை...!
இனிக்கின்ற செய்திகள் வந்தாலும் துளிர்விடும்
கண்ணீரால் விழியோரம் நித்தமும் ஈரமாய்...!
சிரிக்கின்ற தருணங்கள் எமக்கில்லை...
சிலையாகிய உடலில் வடிகின்ற கண்ணீர் மட்டும்
அசைகின்றது நிலம் நோக்கி....
நிரம்பி வழியும் உன் நினைவுகளும் வலிகளும்
பயணிக்கின்றன விழியோரமாய் - வலிகளை
விழிகள் உணர்ந்து இமை மூட மறுக்கின்றன...!
ஆழிகள் தோற்று விடுமன்றோ - என்
விழி நீரின் ஆழத்தோடு...
அரசி நிலவன்
வருந்த வைக்கும் வரிகள்...இந்த நிலை மாறும்...
ReplyDelete