அலைக்கழிக்கப்பட்டாலும்
அசராத அழகு முகத்தில்
அன்பு ஊற்றெடுத்துச்சொரியும்...!
அழகு புன்னகை அசைந்தாடும்..!
துரோகத்தனங்களை
துச்சமாய் கடந்து
துன்பங்களை துரத்தியடித்து
துயர்களைத்துடைத்து
துவண்டு போகாத அகத்தை
துடிப்பாய் காட்டும்
துடுக்குத்தனம் மிக்க உந்தன்
துணிச்சல் முகம்...!
சின்ன அங்கம் மெலிந்தாலும்
என்ன பங்கம் நேர்ந்தாலும்
மின்னும் தங்கமாய் முகம்
இன்னும் பள பளக்கின்றதே..!!!
பொங்கம் மிகு உந்தன்
சங்கத்தமிழ் பேசும் முகத்தினால்
துங்கம் அடைகின்றாய்..- எனை
புங்கம் கொண்ட
தங்க முகத்தோனே...!
கள்ளமில்லா குழந்தை
உள்ளங்கொண்ட உந்தன்
வசீகரிக்கும் கண்களின்
வருடும் அன்பொளியும்..,
வஞ்சமில்லா சிரிப்பும்..,
வதனமதில் ஒருங்கு சேரும்..!
மகிழ்வின் உறைவிடம்..!
கருணையின் பிறப்பிடம்..!
உண்மையின் தரிசனம்..!
உந்தன் வண்ண வதனத்தின்
உயர்நிலைக்கு தங்க முகம்
உவமானம் தன்னும் சற்று
ஒரு படி தாழ்வில் தான்...
அரசி நிலவன்
அரும்பதங்கள்
****************
பொங்கம் : பொலிவு
துங்கம் : உயர்ச்சி
புங்கம் : வெற்றி
வணக்கம்
ReplyDeleteகவிதையின் வரிகள் மனதை கவர்ந்தவை ஒரு சிறப்பான படைப்பு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றிகள் சகோதரா....உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன்...
Delete////பொங்கம் மிகு உந்தன்
ReplyDeleteசங்கத்தமிழ் பேசும் முகத்தினால்
துங்கம் அடைகின்றாய்..- எனை
புங்கம் கொண்ட
தங்க முகத்தோனே...////
ஆஹா...
எத்தனை அருமையான சொல்லாடல்..
இன்பத்தேனாய் தித்திக்கிறது
விரல்வழி கசிந்த மொழிகளெல்லாம்...
அருமை அருமை..
மிக்க நன்றி அண்ணா உங்கள் கருத்திற்கு....வரவேற்கின்றேன் இன்னும் என் வரிகளை வளம் படுத்த....
Deleteரசிக்க வைக்கும் வரிகள்... மகிழ்ந்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி சகோதரனே..
Deleteதுன்பத்திற்கு மருந்து என்ன...? முந்தைய பகிர்வின் தொடர்ச்சியாக... குறளின் குரலாக... : நான் + துன்பம்
ReplyDeleteஅழகென்ற அழகிற்கு உவமிக்கும் ஒன்றும் பொருந்தாதுதான்..
ReplyDeleteஅழகிய கவிவரிகள்! அருமை!
வாழ்த்துக்கள் அரசி!
த ம.5
மிக்க நன்றிகள்...உங்கள் வாழ்த்துக்கள் என்னை வளம்படுத்தும் அம்மா...!!
Deleteஉந்தன் வண்ண வதனத்தின்
ReplyDeleteஉயர்நிலைக்கு தங்க முகம்
உவமானம் தன்னும் சற்று
ஒரு படி தாழ்வில் தான்...
பிடித்த வரிகள்... அழகான கவிதை...