உடைமைகள் இழந்தோம்
உலகம் தராசினை நீட்டியது...!
உதிரங்கள் கொடுத்தோம்
கடல் அன்னையும் தூரமாய்...
கட்டுமரங்களின் அதிகரிப்பால்....!
வறுமையின் நிமித்தமே
வந்தேறியவர்கள் அவர்கள் ...!
கசங்கிய துணி தான்...
கல்லும் முள்ளும் கொண்ட பாதம் தான்
அன்றாடம் உழைப்புத்தான் - ஆனாலும்
அச்சப்பட்டு நடுங்கியதில்லை..!
வறுமைக்கோட்டிற்கு கீழ் என்று அவர்களை
வரையறுத்து வைத்தாலும்....
வட கிழக்கில் வாழ்வோரை விட
வறுமையற்று இல்லையே...!
வந்தேறிய குடிகளை
வந்த வழி திருப்பிட திராணியற்ற பண்டாரவன்னியன்
வம்சத்து ஏழைகள் ......!
வழி வழியாய் தொடர்கின்ற வரலாறே...
அசர வைக்கும் அரண் மனை இல்லம்
அழகிய ஆடம்பர மகிழுந்து
அவ்வப்போது அயல் நாட்டுக்கு சுற்றுலா
அனு தினமும் இறைவனுக்கு காணிக்கை
அள்ளி அள்ளி கொடுத்தாலும் வற்றிடா செல்வம்...!!
அட்சய பாத்திரம் இருந்தால் ஏழை இல்லையா??
அந்தரத்தில் தன் உயிர் ஊசல் ஆடும்
அநாதை தமிழர்களின் ஏழ்மை யாருக்கும் தெரிவதில்லை...!!
அன்று தொட்டு இன்று வரை
அதிகார பரவலாக்கல் பிச்சைத்தட்டில்
அங்கு மிங்கும் விழும் சில்லறைகளை
அண்ணாந்து நோக்கி ஏம்பலிக்கும்
அக்னி நெஞ்ச தமிழர்களின் ஏழ்மை நிலை...
அகிலம் அறிந்திட வாய்ப்பில்லை....!!!
அரசி நிலவன்
மிகவும் வருத்தப்பட வேண்டிய உண்மை...
ReplyDelete"உடைமைகள் இழந்தோம்
ReplyDeleteஉலகம் தராசினை நீட்டியது...!
உதிரங்கள் கொடுத்தோம்
உயரத்தான் இருந்தது தராசு..
உயிர்களையும் ஈந்தோம்...!
உலகத்தின் படிகளுக்கு சமனாகவில்லை!!!
உலகத்தராசின் சமனுக்கு ஈடாய் வழங்கிட ஏதுமில்லா ஏழைகள்....!! "
உயிருள்ள உண்மை வரிகள்...!!!
உமையாக உள்ளது
உலகம் இன்றும் ஏநோ...!!!