Search This Blog

Monday, 21 April 2014

பழி...!!!

உலகை  பொய்யும் ஏமாற்றங்களும் அரசாள
உண்மை சிறையில் மெளனித்து உறங்குகின்றது...!

நீதிகள் நியாயங்கள் கல்லெடுத்து அடித்து துரத்தப்படுகின்றது...
நீண்டு சென்றே போகின்றது அநியாயங்கள்...!

அரங்கேற்றும் அராஜகம்
அத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை...!
அப்பாவிகள் பழி சுமத்தப்பட்டு பலியாக்கப்படும்
அநியாயங்கள் இலகுவாக மறைக்கப்பட்டு
அப்பட்டமாய் நியாயமாக்கப்படுகின்றது
அதிகாரம் கொண்டவர்களால்...!

அந்தோ பரிதாபம்....!
அப்பாவிகளுக்கு மட்டும் பழி அல்ல.
அரங்கேறும் அநியாயங்கள்
உண்மைகளை பழி சுமத்தி
உலகின் கண்களுக்கு உண்மையும்
குற்றவாளியாக தான் காட்டுகின்றன...!

பொய்யால் நிறைந்த சமூகம்
பொல்லாத ஏமாற்றங்களால்
உண்மையினை ஏற்க மறுக்கின்றது...
உண்மை இங்கே கண்ணீர் விட்டு அழுகின்றது நெடுநாளாய்
உலகிற்கு கண்கள் தெரியவில்லை காதுகளும் கேட்கவில்லை
ஏந்திய பழிச்சொல்லை வழிநெடுக தாங்கி வருந்தும் உண்மை
ஏமாற்றங்களையும் பொய்களையும் ஒரு நாள் பிழிந்தெடுத்து
தன்னிலையில் செழித்திருக்கும் காலம் விரைவில் கனிந்திடும்...!

பழிகள் நியாயத்தின்
குழிகளில் பலியாகும் நேரம் - உண்மையின்
விழிகள்  சொரியும் ஆனந்த கண்ணீர்
ஆழிகளை தாண்டி பெருகும்...!
ஒழிந்து போகும் பொய்யும் அநியாயமும்
சுழியில் மாட்டியதை போன்று சிக்கித்தவிக்கும்...!

No comments:

Post a Comment