Search This Blog

Tuesday, 29 April 2014

தாலாட்டு....!


தாலாட்டு பாடிட இங்கு
தாய் அருகில் இல்லை...!

பராமரிப்பு இல்லத்து ஆயா 
பரிவில் தாயாக மாறிப்போனாள் 

விடுமுறை நாளிலும் வீட்டில் 
விருந்தினர் தொல்லை 

பேந்த பேந்த முழிக்கும் கண்மணிக்கு 
பேர்த்தியாரும் பக்கத்தில் இல்லை...!

தொட்டுப்பார்த்து முத்தமிட 
தொட்டில் கட்டி தாலாட்ட 
பெற்றவளுக்கு நேரமில்லை 

பிள்ளையின் எதிர்காலத்திற்கு 
எல்லையின்றி  உழைக்கின்றார்களாம்.
நிகழ் காலமதில் அநாதரவாக்கி...

பிஞ்சு  மனம் பாசத்திற்கு ஏங்கி 
நெஞ்சு பிளக்கின்றது...!

தாலாட்டி மெல்ல தட்டி தட்டி 
தரைப்பாயில் புரண்டு 
தாயவளின் அணைப்பில் உறங்கிடும் 
தாய் நாட்டு குழந்தைகள் பேறு பெற்றவை 

தங்கத்தால் இழைத்தாலும்  
தனியே பஞ்சணையில் கண் உறங்கிட
தவிக்கின்ற புலம்பெயர் தேசத்து  குழந்தைகள் - உள்ளம் 
புண்ணாகி போகின்றன தினம் தினம்...!

தாலாட்டு என்றால் என்ன 
தாயாரிடம்  வினா எழுப்ப 
தயார் படுத்துகின்றார்கள் இன்றே...

உழைத்து ஓய்ந்த அன்னை 
உண்மையில் வெட்கி நிற்பாள்..! 
ஒலிநாடாவில் தாலாட்டை 
ஒலிக்க வைத்து ஓடியவள்  
ஒளிந்து கொள்வாளோ...?

தாலாட்டும் தாயும் தூரமாகி 
தாய் மொழியும் மறந்து போன 
தேசத்தில் நேசமற்று வேசம் காட்டி 
வாசம் செய்கின்றோம்...!


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "தாலாட்டு" என்ற தலைப்பில் இன்று (29.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/


2 comments:

  1. வணக்கம் நண்பர்களே

    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    ReplyDelete

  2. தாலாட்டும் தாயும் தூரமாகி
    தாய் மொழியும் மறந்து போன
    தேசத்தில் நேசமற்று வேசம் காட்டி
    வாசம் செய்கின்றோம்...!//

    அற்புதமான வரிகள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete