வெள்ளி ஒடமொன்று வானக்கடலை கடக்க,,,
வெண்மேக கூட்டங்கள் தாய் வீடு செல்ல,,,
இதமான இளங்காற்றுக்கு,,,,
இளஞ்சிவப்பு ரோஜா செடி..
இடுப்பை வளைக்க,,
கருத்தில்லா கவி நான் பாட...
கண்ணுறங்காமல் நீ கேட்டிருக்க,,,
புதியதோர் உலகத்திற்கு
புட்பக விமானத்தில் நாம் பறக்க ,,,,,
கடவுள் வந்திருந்தால் கூட,
கவனிக்க முடியாதவர்களாய்..
மிக்க வேலைப்பளு...!!
மிதமான ஒரு செருக்கு...!!!
காதலிலே கரை கண்டதாய்,
காவியத்து நாயகர்களாய்...
அர்த்தமில்லாத நினைப்புகள்,,,
தொடர்பில்லாத கனவுகள்,,,
உணராத பலவற்றை - இன்று
உணர்த்துகின்றது உன் பிரிவு....!
வெண்ணிலா இன்று வானக்கடலிலே,,,தத்தளிப்பதாய்
வெறுமையாய் ஒரு காட்சி...
என்றும் போல,,
எல்லாமே ஒன்றாயிருக்க,,
எனக்கு மட்டும் ஏன் வெறுமையாய்,,,
என் இதயம் வெறுமையானதாலா..???
அரசி நிலவன்
" இதயம் வெறுமையானதாலா? " என்ற தலைப்பில் எழுதிய எனது கவிதையின் கன்னிப்பயணத்தில் இடம்பெற்ற ஒரு கன்னிக்கவிதை தான் இது. இக்கவிதைக்கு ஐந்து வயது ஆகும் இவ்வேளையில்...உலக தமிழ் இணைய வானொலியின் கவிதையும் கானமும் நிகழ்ச்சியின் " வெறுமை " தலைப்பிற்காக மீண்டும் இன்று பயணிக்கின்றது..
வணக்கம்
ReplyDeleteகவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
இந்த பிரிவு இருக்கே..
ReplyDeleteஅது ஒரு பெரும் ஆசான்..
பல விஷயங்களை நமக்கு கற்றுக்கொடுக்கும்
மாமாங்கம்..
அழகான சொற்களால்
அழகிய கவி மண்டபம் கட்டியிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள் சகோதரி..