கார்காலத்தில் கல்லறை தேடி வரும்
கண்மணிகளே உங்களை காணாது....
காத்திருந்து மலர் சொரிகின்ற
கார்திகைப்பூக்கள் உதிர்கின்றன....
பறிக்கப்படாமலேயே...
கானக்குயில்கள் திசையற்று
கானம் இசைத்து தேடுகின்றன....!
கார்காலத்து கார்மேகமும் - உங்களை
காணாது பதறுகின்றன விண்ணில்...!
கார்த்திகை மாதமும் கலங்கி
கண்ணீர் வடிக்கின்றது....!
உறைவிடங்கள் உலுப்பப்பட்டு
உடைக்கப்பட்ட தங்க விக்கிரகங்களை
மென்று தின்று ஏப்பம் விட்டவர்களின்
மத்தியில் நின்று...
உங்கள் உதிரங்கள் தோய்ந்த
மண்ணின் வாசம் நுகர்கின்றோம்....!!!
ஆண்டவனின் ஆலயமணியும்
ஆராயப்படுகின்றது கார்த்திகையில்....!!!
சுடர்தீபங்களுக்கும் விளக்க மறியல் கார்த்திகையில்...!!
சுற்று வட்டாரம் எங்கும் சீருடைகளின் ஆதிக்கம்..!!
சுடர் ஒளிகள் உங்களை காண அந்தரமாய்
சுற்றி சுற்றி ஏங்கித்தவித்து
சுழலும் எங்களை காண வாரிரோ..??
அரசி நிலவன்
No comments:
Post a Comment