Search This Blog

Saturday, 3 August 2013

அடங்கா மண் கற்றுத்தந்த வீரம் அடக்கமான உதிரத்தில்.... அமைதியாய் உறங்குகின்றது....!!!


வெடியின் நெடிகள் நிறைந்த
வெஞ்சமர்களை நெஞ்சு நிமிர்த்தி 
களமாடி சிங்களத்தின் பிடரி   
கதிகலங்க வைத்து....


நெஞ்சிலே நஞ்சு மாலையினை  ஏந்தி 
நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கும் 
தமிழீழ  வேட்கையின் சுவடுகளை...
தலைவன் பின்னால் தடம் பதித்து.....,,
தலை நிமிர்ந்து  திமிருடன் 
தலை வணங்காது  நாம் நடந்த 
தரை எங்கும்  இன்று நாணி
தலை குனிந்து செல்லுகின்றேன்...!!!



அடங்கா மண் கற்றுத்தந்த வீரம்  
அடக்கமான உதிரத்தில்....
அமைதியாய்  உறங்குகின்றது....!!!

யாசிக்கும் யாசகனுக்கு புன்னகை சிந்தும்  
யாரும் எம்மை நோக்குவது அரிதே...!
புறம் பேசிடும் உள்ளங்களும்  
புது உறவுகள் அல்ல - ஈழ
அன்னையை  நேசித்து, 
அண்ணனை துதித்து, 
புனிதமாய் எம்மை நினைத்த 
எம்மினமே....!!!
எள்ளி நகையாடுவதும்  
எம்மினமே...!!!

சொல்லாட 
சொந்தங்களே  பின்நிற்கின்ற
சோகமும்,,,  

எல்லையிலே - அன்று 
எட்டி உதை பட்ட  காடையர்  
எட்டப்பர் கூட்டத்தின் முன்னால் 
முதுகெலும்பு அற்ற வாழ்வும்,,

புனர்வாழ்வு என்ற பெயரில் எம் உள்ளத்தை 
புண்ணாக்கி எம்மை நோக்கும் அசிங்க கண்களும்,, 

" முன்னாள் போராளிகள்" என்ற அடைமொழி கொண்டு 
முகத்திற்கு நேரே விழிக்கும் செய்தியாளர்களின் 
வில்லங்கமான வினாக்களும் விளக்கங்களும்,,  


இரண்டடி தூரத்தில் பேசிடும் வசைமொழிகளும்,, 
இரவுக்கு மட்டும் தெரிந்திடும் கண்ணீரும்,,
எந்த நொடியும் வாசலுக்கு வரலாம் என 
எதிர்பார்த்து கலங்கிடும் விசாரணை அழைப்பும்,,
எம் இதயத்தில் எரியும் தீயினை அணைத்திடுமா???
எம் நெஞ்சில் நீறு பூத்த நெருப்பாய் தகிக்கும் நினைவுகளை அழித்திடுமா???


முடிந்து விட்டது என்று முட்டாள்தனமாய் எண்ணுகின்ற 
முடிவில்லா போராட்டம் முடிந்து தான் போய்  விடுமா?? 
முடங்கி தான் உள்ளதேயன்றி முகவரி அற்றுப் போய் விடவில்லை ...!!!


வரியணிந்த வேங்கைகள்...
கொடூர சிங்க கோரப்பற்களால் கிழிக்கப்படுவதும், 
நரிகள் கூட்டத்தால் எள்ளி நகையாடப்படுவதும்,
வீழ்ந்த விழுப்புண் ஆறும் வரையே............................... 



4 comments:

  1. //முடிந்து விட்டது என்று
    முட்டாள்தனமாய் எண்ணுகின்ற
    முடிவில்லா போராட்டம்
    முடிந்து தான் போய் விடுமா??
    முடங்கி தான் உள்ளதேயன்றி
    முகவரி அற்றுப் போய் விடவில்லை ...!!!

    வரியணிந்த வேங்கைகள்...
    கொடூர சிங்க கோரப்பற்களால் கிழிக்கப்படுவதும்,
    நரிகள் கூட்டத்தால் எள்ளி நகையாடப்படுவதும்,
    வீழ்ந்த விழுப்புண் ஆறும் வரையே............//

    காயங்கள் மாறியதும்...
    சிங்கங்களின் வாழ்நாள் எண்ணப்படும்!

    -வல்வை அகலினியன்.

    ReplyDelete
  2. கைக்குள் மட்டும் அறியும்
    கண்ணீர்த் துளிகள் ஒரு நாள்
    கடும் பேரலையாய் திரண்டு எழும்
    கவலை விடு தமிழ் உறவே....

    ReplyDelete
  3. இரண்டடி தூரத்தில் பேசிடும் வசைமொழிகளும்,,
    இரவுக்கு மட்டும் தெரிந்திடும் கண்ணீரும்,,
    எந்த நொடியும் வாசலுக்கு வரலாம் என
    எதிர்பார்த்து கலங்கிடும் விசாரணை அழைப்பும்,,
    எம் இதயத்தில் எரியும் தீயினை அணைத்திடுமா???பதிவு அருமை தொடருங்கள் அன்புத் தங்கையே

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete