Search This Blog

Friday, 31 May 2013

பொங்கி எழுந்த போராட்டம் பொருளற்று போன போதே....


பொத்தி பொத்தி 
பொக்கிசமாய் பேணி
பொறுமை காத்த காதல்.. 
பொருள் அற்று போனது...!!!


நிலை குலைந்த உள்ளம் 
நின்று தள்ளாடியது, 
நிர்க்கதியான காதலை 
நிலை நிறுத்திட 



உணர்வற்ற மெய்யிற்கு 
நேசமாகிய பசி..!!


கால நேரம் பார்த்திடா
ஆலய பிரவேசம்...!! 

கடவுளோடு மனம் 
பேசிடும் பிரார்த்தனை..!!


நிழலாய்  பின்தொடர்ந்த  
குளமான  கண்ணீர்..!! 

வெட்கமறியா புலம்பல்..!
விரும்பிடும் தனிமை...!


கைபேசியை இமைக்காமல் 
கண்காணிக்கும் கண்கள்...!!



சத்தமின்றி ஓலமிட 
எதிர்பார்த்திடும் இரவு...!!

காதல் கை சேர்ந்திடும்  என்ற 
அசையாத நம்பிக்கை....!


இன்றும் நினைத்தால் 
சின்னதாய் சிரிப்பு,,,

புத்தி பேதலித்து இருந்ததாய் 
நெஞ்சத்தில் ஒரு நினைவு 
தெளிந்தது எப்போது??  


முப்பதாண்டு காலமாய்  
பொங்கி எழுந்த போராட்டம் 
பொருளற்று போன போதே....!!!!





அரசி நிலவன் 

3 comments:

  1. படத்திற்கேற்ற வரிகளா...?

    வரிகளுக்கேற்ற படங்களா...?

    ReplyDelete
  2. வரிகளுக்கேற்ற படங்கள்,,,,

    ReplyDelete
  3. படங்களுக்கேற்ற குறுவரிக் கவிதைகள் அருமை தோழி .....

    ReplyDelete