படர்ந்து கிடக்கும் வானத்தை அண்ணாந்தாள்
பரவிக்கிடந்த மேகக்கூட்டங்கள் எங்கே?
இவள் நிலை எண்ணி எங்கோ ஒளிந்தனவோ...?
சுட்டெரிக்கும் சூரியனின் வெம்மை தாங்கிடாமல்
முன்னிரவின் பால் நிலவில் குளிக்க காத்திருந்தாள்...!
பசியும் களைப்பும் பறந்தோடிடும்
பகலாகி போகும் அந்த குடிசையும்
பரந்த வானம் இங்கே வெறுமை கொண்டு
பட்டினி போடுகின்றது அவள் வறுமை போன்று
வறுமையால் சுருங்கிய உண்டி
வெறுமையால் தவித்து பழக்கமாயிற்று....!
நீர் நிரம்பிய வயிறு
நீண்டு செல்லும் இரவின் பயணத்தில்
நின்று தாங்கிடுமோ?
பால்நிலவின் ஒளியை பருகிட காத்திருந்தாள்
பார் மூடிய இருளிளில் வானம் விழி முட்டி
ஓவென்று அழுது கொண்டே இருக்கின்றது
ஓலமிட்ட மேகங்கள்
ஒன்றோடொன்று கட்டியணைத்து
ஒப்பாரி வைக்கின்றது...!
பட்டினி கிடக்கும் அவளின்
பரிதவிப்பை எண்ணி அழுது வடிக்கின்றன...!
பாவி இவள் என்று பாவம் பார்த்து கதறுகின்றன.
பாவி மழையே உன் கண்ணீரில் குடிசை மிதக்கும்
பரிதாபம் அறியாமல் யாருக்காய் அழுது தீர்க்கின்றாய்
பதறி எழுந்து நீரில் விறைக்கும் வெறுமை கொண்டவளை
பாழாய்ப்போன இயற்கையும் வறுமைதனை உணர்த்துகின்ற கொடுமை....!
வானத்தின் கண்ணீரோடு அங்கே அவள் கண்ணீரும் சேர்ந்து
நீர்மட்டம் உயரந்தது
வெறுமையும் கருமையும் கொண்ட இரவின் நீட்சி
வறுமையின் சாட்சிகளாகி வானம் வரைக்கும்
உரத்து கூ றியது....!
ஏனோ உலகம் இன்னும் உணரவில்லை
அமைதியாக தூங்குகின்றது....!
சிறுமை குணம் கொண்டதால்
வறுமை பெற்று வரும் இன்றைய உலகம்...!
அருமை விளங்கிடாத
எருமை மானிடம் சிந்தி சிதறும் பருக்கையின்
பெருமை உணரந்திடும் இந்த
வெறுமை கொண்ட உண்டிகள் மட்டுமே...!
சிறந்த பாவரிகள்
ReplyDeleteதொடருங்கள்
கொடிது கொடிது வறுமை கொடிது..
ReplyDeleteஅதனினும் கொடிது
இளமையில் வறுமை..
நெஞ்சுருக்கும் ஆக்கம் சகோதரி...