பசி மறந்தேன்..
பகல் இரவும் மறந்தேன்...
பக்கத்தில் நீ இல்லை என்பதையும் மறந்தேன்...!!!
நாளொரு இடுக்கண் பொழுதொரு சஞ்சலம்
நாலா புறமும் இருள் கவிழ்ந்து
நாதியற்ற அனாதையாய் நான் மட்டும்...!!!
தூக்கம் என்பது விரும்பாத ஒன்றாகி - என்னை
தூக்கிலிட்டு கொள்ளத்தான் மனம் எத்தனிக்குதே...!!!
தூர தேசத்தில் இருக்கின்ற என் இதயம்
தூண்டில் மீனாய் தவிக்கின்றதே..!!!
நற்செய்தி இல்லை - ஆனால்
நிமிடத்திற்கொன்றாய் புதுப்புது வரவாக
உள்ளத்தை உருக்குலைக்கும் துயரங்கள்
உள் நுழைவதில் பஞ்சமில்லை..!!!
ஒரு தலை மேல்
பல மலை போல்
சுளை சுளையாய்
சுமக்கின்ற துயருக்கு பெயர் தான்
வாழ்க்கையா???
கசக்கின்ற வாழ்வை சகித்து
கரும்பாய் இனிக்கின்ற வாழ்வை சிரித்து
கடுஞ்சோதனை வாழ்வை சாதித்து வென்றிடலாம்
கடந்து போக முடியா வாழ்வினை எதை கொண்டு வெல்வது
??
கனவிலும் சிரிப்பின்றி கண்ணீரே துணையாகி
கல்லாகி போன கடந்த கால நினைவோடு..
கரும் இருளாகி போன நிகழ்காலத்தில் நின்று
கரத்தில் ஒரு தீக்குச்சி இன்றி
கடந்து செல்ல முடியுமா எதிர்காலத்தை நோக்கி...??
இந்த நிலையும் மாறிவிடும். கலங்காதீர்கள். கவி கனக்கிறது.
ReplyDeleteநன்றி அண்ணா ...!!
ReplyDeleteகண்மூடி எழுந்த வரிகள் இல்லை.
கனத்த இதயம் கக்கிய வரிகள்...!!!