மலரும் தமிழீழமதில்,, மலர்ந்திடுவீர் கார்த்திகை பூக்களாய்.....!!

Saturday, November 27, 2010 ·

கருவறையில் - தமிழீழ
கனவோடு
கருத்தரித்து,,
களமாடி,,
கல்லறையில் துயில் கொள்ளும் 
கண்மணிகளே....!!!

புயலாய் புறப்பட்ட - வெஞ்சின  

புலி மறவர்களே...!!!


மன்னவன் கரிகாலன் பாதையில்,
மனவுறுதியுடன் ஏகி,,  
மண்ணுக்காய் வித்தாகி 
மண்ணோடு சங்கமமாகி,,
மனக்கனவோடு உறங்கும்..
மரகதங்களே...!!!


சிந்திய குருதி காய்ந்தாலும்,,
சீறிய சன்னங்களின் ஒலி மறைந்தாலும்,,
உம் கல்லறைகள் விறாண்டப்பட்டாலும்,,
கல்லான எம் கடவுள் உயிராவான் -எம்
கனவு நனவாகும்...!!!

கல்லறை பூக்களே - நீவிர்
துயில் நீங்கி எழும் காலம்
வெகு தூரமதில் இல்லை...!!
தங்கப்பதுமைகளே கண்திறந்து பாரீர்...!!

தமிழீழ வேட்கையோடு - உங்கள் 
தமிழீழ மக்கள் நாம் என்றும் களத்தில்..
மலரும் தமிழீழமதில்
மலர்ந்திடுவீர் கார்த்திகை பூக்களாய்.....!!!






Post a Comment